பங்குசந்தையில் Support மற்றும் Resistance-ன் பயன்பாடு என்ன?
வணக்கம் நண்பர்களே !
எல்லோரும் நலம் தானே . நலமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன் .
இன்று நாம் பங்குசந்தையில் Support மற்றும் Resistance-ன் வேலை நாம் அதை எப்படி வரைவது மற்றும் எப்படி பயன்படுத்தி வர்த்தகம் செய்வது என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் காண்போம்.
பங்குசந்தையில் முதலீடு செய்யும் அனைவருக்கும் மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் Support மற்றும் Resistance. நீங்கள் பங்குச்சந்தையில் chart பார்த்தீர்களானால் சந்தையோ அல்லது ஒரு பங்கோ ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் .
பொதுவாக பங்குசந்தையில் Support மற்றும் Resistance என்பது முந்தைய விலை நிலவரங்களை அடிப்படையாக கொண்டும் ஏற்ற இறக்கங்களை அடிப்படையாக கொண்டு ஆராயப்படுகிறது . இவற்றின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வதின் மூலம், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சந்தையின் இயக்கங்களை நன்கு புரிந்து கொள்ள முடியும் .
இங்கு நாம் ஒரு பங்கினை உதாரணமாக எடுத்துக்கொண்டு அதில் support மற்றும் resistance எப்படி வரைவது எப்படி வர்த்தகம் செய்வது என்பதை காணலாம் . இதற்கு நான் தேர்வு செய்திருக்கும் பங்கு இந்தியன் ஆயில் கார்பொரேஷனின் பங்கு . அதற்கு முன்பு Support மற்றும் Resistance என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். பங்குசந்தையில் Support என்பதை ஆதரவு என்றும் Resistance என்பதை எதிர்ப்பு நிலை என்றும் கருதலாம் . நான் இங்கு எளிதில் புரிந்துகொள்ள Support என்றும் Resistance என்றும் குறிப்பிடுகிறேன் .
Support என்றால் என்ன ?
Support என்பது ஒரு பங்கின் விலை ஒரு குறிப்பிட்ட புள்ளியில் சரிவடைந்து மீண்டும் உயரத் தொடங்கும் விலையை குறிக்கிறது. இதற்க்கு காரணம் என்னவென்றால் அந்த பங்கின் விலை குறைந்ததால் வாங்குவதற்கு அதிகமான முதலீட்டாளர்கள் அல்லது வர்த்தகர்கள் ஆர்வம் காட்ட துவங்கிவிடுகின்றனர். இதனால் அந்த பங்கின் விலை மீண்டும் மேலே செல்ல அதாவது பங்கின் விலை அதிகரிக்க துவங்கும்.
எடுத்துக்காட்டு:
படிப்படியாக சரிந்து வரும் பங்கு ₹100 என்ற விலையினை அடைந்தவுடன் மீண்டும் மேலே போகத் துவங்கும். இங்கு ₹100 என்பது Support ஆகும் .
Resistance என்றால் என்ன ?
Resistance என்பது ஒரு பங்கின் விலை உயர்ந்து ஒரு குறிப்பிட்ட புள்ளியில் தடைபட்டு பின் கீழே சரிவதை குறிக்கிறது. இந்த விலையில் பல முதலீட்டாளர்கள் பங்கினை விற்று லாபம் பார்க்க துவங்குவதால் பங்கின் விலை குறைய ஆரம்பிக்கின்றது .
எடுத்துக்காட்டு:
படிப்படியாக உயர்ந்து வரும் பங்கு ₹150 விற்பதால் விலை குறையத்துவங்கும். இங்கு ₹150 என்பது Resistance ஆகும் .
Support மற்றும் Resistance இன் நோக்கம் என்ன ?
Support மற்றும் Resistance இரண்டும் மிக மிக முக்கியமான நிலைகள் பங்குசந்தையில் . இவற்றை மிக தெளிவாக நுட்பமாக அறிந்துகொண்டால் நாம் மிக எளிதாக பங்குசந்தையை புரிந்து கொள்ள முடியும். இந்த Support, Resistance-ஐ தெரிந்து கொண்டு Support இல் பங்கினை வாங்கி Resistance இல் விற்று லாபம் பார்க்கலாம் .
பொதுவாக பங்குச்சந்தையை அதன் நகர்வை புரிந்து கொள்ள கடினமாக தோன்றினாலும் நாம் இப்பொழுது பார்த்த Support & Resistance ஐ மட்டும் புரிந்து கொண்டால் பங்குச்சந்தையின் நகர்வை பங்கின் ஏற்ற இறக்கத்தை ஓரளவு நாம் கணிக்க முடியும் .
Support மற்றும் Resistance இல் பங்கின் நகர்வினை நாம் முன் கூட்டியே கணித்து விட்டால் அந்த விலைகளில் நாம் பங்கினை வாங்குவதை அல்லது வாங்கிய பங்கை விற்பதா என்ற முடிவுக்கு வர முடியும்.
Support & Resistance இவை சந்தையின் போக்கை குறிக்கும். உதாரணமாக IOC பங்கின் விலை எவ்வாறு மாறி உள்ளது என்பதை கீழே உள்ள படத்தின் மூலம் புரிந்துகொள்ள முடியும் .
பங்குசந்தையில் முதலில் உள்ள Support இல் பங்கின் விலை மீண்டும் மேலே ஏறத் தொடங்கும் கடைசியாக உள்ள Resistance ஐ தாண்டினால் மேலே விலை உயர வாய்ப்பு உள்ளது . மேலே உள்ள படத்தில் IOC இன் விலை நகர்வினை காணலாம். இங்கே 170 ரூபாய் என்ற விலைக்கு சென்ற உடன் பங்கின் விலை மீண்டும் மேலே உயர ஆரம்பிக்கிறது . இங்கு 170 ரூபாய் என்பது Support என கருதி வாங்கினால் சில நாட்களில் பங்கின் விலை 175 ரூபாய் அடைந்ததும் நாம் ஐந்து ரூபாய் லாபத்தை அடையமுடியும் . இதே போன்று 175 ரூபாய் தொட்டதும் பங்கின் விலை குறையத்துவங்கியது இங்கு 175 ரூபாய் Resistance என கருதி விற்று விடலாம் .
இது வரை நாம் பங்குசந்தையில் மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய Support & Resistance பற்றி தெரிந்து கொண்டோம் . அடுத்த பதிவில் Chart பற்றிய விவரங்களை அலசி ஆராய்ந்து தெரிந்து கொள்வோம் .
அடுத்ததாக இந்த பதிவில் மட்டும் அல்ல ஒவ்வொரு பதிவிலும் ஒரு நிறுவனத்தின் பங்கினை அலசி ஆராய்வோம் . அந்த வகையில் நாம் இன்று IOC எனப்படும் INDIAN OIL CORPORATION நிறுவன பங்கு பற்றி காணலாம் .
INDIAN OIL CORPORATION நிறுவன பங்கு ஒரு பார்வை!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation – IOC) பங்கு பற்றிய விவரங்கள் மற்றும் பகுப்பாய்வு:
1. கம்பெனியின் அறிமுகம்:
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும், இது இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நிறுவனம் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம், மறுவிற்பனை , மற்றும் பொதுமக்களின் பயண தேவையை பூர்த்தி செய்கின்றது.
IOC நிறுவனத்தின் பங்குகள் பொதுவாக நீண்டகால முதலீட்டாளர்களுக்கும், குறுகியகால வர்த்தகர்களுக்கும் அதிக ஆர்வம் கொண்ட பங்காக முதலீட்டாளர்களால் பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இது இந்திய அரசின் அதிகாரப்பூர்வ கம்பெனி ஆகும்.
2. பங்கு விலை வரலாறு (Price History):
IOC பங்குகளின் விலை கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளது. ஏராளமான வெளி மற்றும் உள்நாட்டு காரணிகளால் பங்கு விலை மாறும் தன்மை கொண்டது. இந்தியாவில் எரிபொருள் விலைகள், சர்வதேச எண்ணெய் விலை மாற்றங்கள், அரசின் கொள்கைகள் ஆகியவை இந்த பங்கின் மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஜனவரி முதல் செப்டம்பர் 2024 நிலவரப்படி: IOC நிறுவன பங்கு சுமார் ₹128 முதல் -₹196 வரை விலையளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகள்: பங்குகள் பொதுவாக ₹70-₹195 வரையிலான விலையிலே காணப்பட்டது. சில சமயங்களில் மிகக் குறைவான, மற்றும் அதிகமான விலைகளையும் எட்டியுள்ளது.
3. முக்கிய புள்ளிகள்:
Market Capital : IOC இன் மொத்த மார்க்கெட் கெப்பிட்டலைசேஷன் சுமார் ₹2.45 லட்சம் கோடி ஆகும்
PE Ratio : பங்கு விலை / இலாபம் (PE) விகிதம் சுமார் 5.6 முதல் 8.0 வரை மாறுபடுகின்றது. இது சுமார் ஐந்து ஆண்டுகள் வரை சராசரியிலேயே உள்ளது. (P / E Ratio பற்றி நாம் பின்னர் விரிவாக காணலாம் )
Dividend Yield: IOC பங்கு சுமார் 10-15% மதிப்பீட்டில் அதிகஅளவில் பங்கு ஈவுத்தொகையினை வழங்கி வருகின்றது. இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல Dividend வருமானத்தை தருகிறது .
4. Business Strength:
எரிபொருள் துறையில் முதலிடம்: இந்தியாவில் எரிபொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் முன்னணி நிறுவனமாக உள்ளது. நாட்டில் எரிபொருள் நுகர்வின் பெரும்பாலான பகுதியை IOC நிரப்புகின்றது.
முக்கிய செலவினங்கள் : சர்வதேச எண்ணெய் விலைகள் உயர்வோ அல்லது குறைவோ, அது IOC லாபத்தை நேரடியாகப் பாதிக்கக்கூடும். சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கும்போது, IOC இன் சலுகைகள் மற்றும் லாபம் குறைய வாய்ப்பு அதிகம்.
முதலீட்டு திட்டங்கள்: நிறுவனம் தொடர்ந்து மறுவினை திறன்களை மேம்படுத்தவும், வளங்கள் பெறவும் திட்டமிட்டுள்ளது. அதாவது இயற்கை எரிவாயு, புது எரிபொருள் ஆதாரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்கிறது.
5. பங்கு செயல்திறன் – Stock Performance:
பங்கின் நிலை: 2024 இல் IOC பங்கு சராசரியான விலையில் விற்பனையாகி வருகிறது, அதிக அளவில் வளர்ச்சியினை எதிர் பார்க்க முடியவில்லை . இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டினாலும், குறுகியகால வர்த்தகர்கள் அதன் லாப நஷ்டத்தை அனுபவிக்கின்றனர்.
ஆர்வம் : இது அதிக விலை மாறுபாடுகள் கொண்ட பங்கு அல்ல, ஏனெனில் அதிக அளவு அரசு கொள்கைகளும், சர்வதேச கச்சா எண்ணெய் விலை மாறுபாடுகளும் பங்கு விலையை நிர்ணயிக்கின்றன.
6. பங்கின் நன்மைகள் – Positives:
அதிக Dividend : IOC பங்குதாரர்கள் சீரான Dividend பெறுகின்றனர். இதனால் இதில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் பங்கின் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் பற்றி அதிக கவலை கொள்வதில்லை.
நிலையான வணிகம்: எரிபொருள் துறையில் வணிகம் குறைய வாய்ப்புகள் இல்லை. தினசரி பயன்படுத்தும் பொருளாக உள்ளதால் வணிகம் குறைய வாய்ப்பு இல்லை . மேலும் எரி பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் உள்ளதால் என்றென்றும் சீரான விற்பனையினை எதிர்பார்க்க முடியும்
அரசின் ஆதரவு: அரசு நிறுவனமாக இருப்பதால், வர்த்தகத்தில் அரசின் நேரடி கையாளல் உள்ளது, இது பங்கு விலையையும் வர்த்தகத்தையும் பாதுகாக்கின்றது.
7. பங்கின் சவால்கள் – Challenges:
சர்வதேச எண்ணெய் விலைகள்: சர்வதேச எண்ணெய் விலைகளில் நிலவும் மாறுபாடுகள் நிறுவனத்தின் லாபத்தை பெரிதும் பாதிக்கக்கூடும். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் லாபத்தையும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் நஷ்டத்தையும் காணலாம் .
அரசின் தலையீடு: அரசின் சலுகை மற்றும் கொள்கைகள் சில சமயங்களில் முதலீட்டாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். பொருள் சந்தையில் விலையை குறைத்தால் நஷ்டம் அடைய வாய்ப்புகள் அதிகம் .
8. பங்கின் எதிர்காலம் – Future Outlook:
எரிபொருள் துறை மாறுதல்: புதிய வகை எரிபொருள் ஆதாரங்கள் (எரிவாயு, CNG ) ஆகியவற்றில் IOC முதலீடு செய்துள்ளதால், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மிக முக்கியமான வாய்ப்புகள் உள்ளன.
அமைதியான வளர்ச்சி: நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் பெறும் வாய்ப்புகளை வழங்கும் நிறுவனம் என்ற வகையில், இது சீரான டிவிடெண்ட் அளிக்கக்கூடிய பங்காக முதலீட்டாளர்களால் பார்க்கப்படுகிறது.
நவரத்தின மதிப்பு : இந்திய பங்கு சந்தையில் IOC பங்கு நவரத்தின அந்தஸ்து பெற்ற பங்காக பார்க்கப்படுகிறது. எனவே பல முதலீட்டாளர்கள் இந்த பங்கில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
சுருக்கம்:
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பங்குகள் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நன்மையானவையாகும், ஏனெனில் இது அதிக அளவில் டிவிடெண்ட் வழங்கும் நிறுவனமாக உள்ளதால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை வாய்ந்த பங்காக உள்ளது . அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பாதுகாப்பான வணிகத்தை அளிக்கின்றது. ஆனால் சர்வதேச எண்ணெய் விலை மாற்றங்கள் மற்றும் அரசின் கொள்கை மாற்றங்கள் பங்கின் செயல்திறனை குறைக்க வாய்ப்புகள் உள்ளன.
Disclaimer :
The information, ideas, and opinions provided on this website are for informational and educational purposes only and should not be construed as financial or investment advice. The content shared on this platform is based on personal views, market research, and publicly available data. While every effort is made to ensure the accuracy and reliability of the information, we do not guarantee its completeness, timeliness, or suitability for any particular purpose.
Investing in the stock market involves risk, including the potential loss of principal. Past performance is not indicative of future results. It is important to conduct your own research and consult with a licensed financial advisor, broker, or other qualified professional before making any investment decisions. The ideas presented on this website do not take into account your personal financial situation, risk tolerance, investment objectives, or other factors specific to your circumstances.
We are not responsible for any losses or damages that may arise directly or indirectly from the use of or reliance on the information provided on this website. Any action you take upon the information found on this site is strictly at your own risk. Additionally, this website may contain links to external websites or third-party content; however, we do not endorse or assume responsibility for the accuracy or reliability of these external sources.
By using this website, you agree to hold the owner, authors, and contributors harmless from any and all claims, damages, or liabilities arising from your use of the information provided herein. Always seek professional advice before making any investment decisions.