இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்வது எப்படி ?

அறிமுகம்

என்னை பற்றி

வணக்கம் நண்பர்களே.

நான் உங்கள் முருகன்பாபு. நான் இளங்கலை இயந்திரவியல் பொறியியல் முடித்து 20 ஆண்டுகளாக கல்லூரியில் Lecturer-ஆக பணிபுரிந்துள்ளேன். பல மாணவர்களை பொறியாளர்களாக உருவாக்கி உள்ளேன்.

பங்குச்சந்தையில் என் அனுபவம்

நான் கடந்த 2010 முதல் பங்குசந்தையில் முதலீடு செய்து வருகிறேன். கடந்த 13 வருடங்களாக பங்குச்சந்தையை பார்த்து வருகிறேன். ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களை பார்த்துள்ளேன். இது குறித்து உங்களுடன் கலந்துரையாட / கலந்துறவாட இந்த தளத்தை பயன் படுத்த விரும்புகிறேன். என்னை தொடருங்கள் பயன்பெறுங்கள் .  இந்த பக்கத்தில் நான் தினமும் சந்தையின் நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை எனது அனுபவத்தை வைத்து கண்டறிந்து உங்களுடன் பகிர விரும்புகிறேன். அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டாம் .  நீங்கள் உங்களுக்கு தெரிந்த முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆராய்ந்து முதலீட்டு முடிவினை எடுக்கவும்.  பங்குசந்தையில் நான் முதலில் வாங்கிய பங்கு IOB நிறுவனத்தின் பங்கு. முதல் வாய்ப்பில் 10 ரூபாய் மதிப்பில் வாங்கியது இன்று அது 60 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. தற்பொழுது மேலும் சில நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளேன்.

பங்குசந்தை ஒரு அறிமுகம் .

நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான முதலீடுகளை பெற கையாளும் வழிமுறைகளில் ஒன்று பங்குகள். தங்களுக்கு தேவையான முதலீட்டு தொகையை முகமதிப்பில் பொதுமக்களிடம் இருந்து பெரும் முறையே பங்குகள். இதற்கு இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற SEBI அமைப்பிடம் அனுமதி வாங்கி பங்குகளை வெளியிட வேண்டும்.

இந்தியாவில் ஆரம்பத்தில் பல பங்கு சந்தைகள் செயல்பட்டன தற்போது இரண்டு பங்குச் சந்தைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன இவற்றில் தினசரி வர்த்தகமும் நடைபெற்று வருகிறது அவை தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தை தேசிய பங்கு சந்தை NSE  எனவும் மும்பை பங்குச் சந்தை BSE எனவும் அழைக்கப்படுகிறது. அதிகமான அளவில்  வர்த்தகம் நடைபெறும் பங்குச்சந்தையாக தேசிய பங்குச் சந்தை உள்ளது. அதிகபட்ச நிறுவனங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுகின்றன. அவ்வாறு பட்டியலிடப்படும் பங்குகளை மட்டுமே நாம் வாங்கவும் விற்கவும் முடியும். தேசிய பங்குச்சந்தையின் குறியீடு 50 முக்கிய பங்குகளை சார்ந்து அளவிடப்படுகிறது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடு 30 முக்கிய பங்குகளை சார்ந்து அளவிடப்படுகிறது. சந்தையின் ஏற்றம் மற்றும் இறக்கத்தை இந்தப் பங்குகளே முடிவு செய்கின்றன. இந்த பங்குகளில் முதலீடு செய்தால் நல்ல வாய்ப்புகளை பெற முடியும், நல்ல லாபங்களை ஈட்ட முடியும். இது குறித்து நாம் ஒவ்வொரு நாளும் அலசும் போது நல்ல ஒரு கண்ணோட்டத்துடன் நாம் பங்குச்சந்தையில் முதலீடு செய்து நல்ல லாபம் பெறலாம். எனவே இந்த பதிவுகளை உங்கள் தாய் மொழியிலேயே படித்து புரிந்து கொண்டு பயன்பெற என்னை இந்த வலைத்தளத்தில் தொடருங்கள். பொதுவாக வீடியோவாக பார்ப்பதை விட படிக்கும் பொழுது நமக்கு நல்ல புரிதல் ஏற்படும் என்பதே எனது எண்ணம். ஆகையால் இந்த வலைதளத்தை நான் துவங்கி என்னால் சிலர் பயனடைந்தாலும் அது எனக்கு மிக்க மகிழ்ச்சியை  அளிக்கும்  என்பதை நான் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உங்கள் சந்தேகங்களை கமெண்டில் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய பங்குச்சந்தையின் வளர்ச்சி !

இந்தியாவில் தற்பொழுது செயல்பாட்டில் உள்ள பங்குசந்தையின் வளர்ச்சி பற்றி இந்த பகுதியில் நாம் அலசுவோம். தற்பொழுது இயங்கும் பங்குச்சந்தை BSE மற்றும் NSE -இன் வளர்ச்சி பற்றி இந்த பகுதியில் காணலாம்.

தேசிய பங்குச்சந்தை (NSE ) – இன்  வளர்ச்சி :

இந்தியாவின் முக்கிய பங்குசந்தைகளில் தேசிய பங்குசத்தை மிக முக்கியமானது. மும்பை நகரத்தில் இதன் தலைமை அலுவலகம் இயங்கி வருகின்றது. இந்த சந்தையானது 1993 இல் துவங்கப்பட்டு 2000க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் இங்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது . மொத்த  சந்தை மதிப்பில் (Market Capital ) ஆசியாவின் இரண்டாவது பங்குசந்தை இதுவாகும் . கடந்த 5 ஆண்டுகளில் உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பங்குசந்தைகளில் முக்கிய இடத்தில் உள்ளது. கீழே உள்ள படத்தை பார்த்தால் இந்தியாவில் உள்ள தேசிய பங்குச்சந்தையின் வளர்ச்சியை புரிந்து கொள்ளமுடியும்.

தேசிய பங்குச்சந்தையின் வளர்ச்சி 

பங்குசந்தை வளர்ச்சியை நாம் சில கால இடைவெளிகளில் காண்போம். சந்தை ஆரம்பித்த 1993 இல் இருந்து 1997 வரை 1000 புள்ளிகள் ஏற்றம் பெற்றன. 2007 இல் 3700 புள்ளிகளும் 2017இல் 8600 புள்ளிகளும் 2022இல் 14000 புள்ளிகளும் ஏற்றம் பெற்றுள்ளன. நான் தற்பொழுது இந்த பதிவினை தயாரிக்கும் பொழுது ஏறக்குறைய 25000 புள்ளிகளை தொட்டு 24800இல் வர்த்தகம் ஆனது நடைபெற்று வருகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சந்தை மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

இந்த புள்ளிகள் எதை குறிக்கின்றன ?

இந்த புள்ளிகள் NIFTY என குறிப்பிடுகிறார்கள். NIFTY என்பது தேசிய பங்குசந்தையில் வர்த்தகம் ஆகும் 50 முக்கிய பங்குகளின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இந்த 50 பங்குகள் மாற்றத்திற்குட்பட்டவை ஆகும். நிறுவனத்தின் trade volume ஐ பொறுத்து இவை மாற்றப்படுகின்றன. இந்த 50 பங்குகள் எவை என்பதை அடுத்தடுத்து பதிவினில் காண்போம்.

தற்பொழுது NSE இல் Segment பொறுத்து பல பிரிவுகள் உள்ளன அவற்றை பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் காண்போம். இங்கே அவற்றின் பெயர்களை குறிப்பிடுகிறேன்.

  1. NIFTY 50
  2. NIFTY NEXT 50
  3. NIFTY 100
  4. NIFTY 200
  5. NIFTY 500
  6. NIFTY MIDCAP 50
  7. NIFTY MIDCAP 100
  8. NIFTY SMALLCAP 100
  9. NIFTY MIDCAP 150
  10. NIFTY SMAACAP 50
  11. NIFTY SMALLCAP 250
  12. NIFTY MIDSMALLCAP 400
  13. NIFTY 500
  14. NIFTY MIDCAP SELECT
  15. BAKNIFTY….

இப்படி நிறைய வகைகளில் பங்குகள் பட்டியலிடப்படுகின்றன. இவை பற்றி நாம் அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

Read  Also : http://www.nseindia.com/

மும்பை பங்குச்சந்தையின் (BSE ) வளர்ச்சி :

மும்பை பங்குசந்தை ஆசியாவின் மிக பழமை வாய்ந்த பங்குசந்தை ஆகும் . இது 1875 இல் துவங்கப்பட்டது. மும்பையின் புகழ் வாய்ந்த “Thalal  Street ” இல் துவங்கப்பட்டு தற்பொழுதும் அங்கேயே செயல்பட்டு வருகின்றது .  இங்கு 3000 க்கும் மேற்பட்ட பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன.  இது “Sensex ” என அழைக்கப்படுகிறது.

SENSEX இன் வளர்ச்சி துவங்கியது முதல் இன்று (04-09-2024) வரை

தற்பொழுது BSE  இல் Segment பொறுத்து பல பிரிவுகள் உள்ளன அவற்றை பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் காண்போம். இங்கே அவற்றின் பெயர்களை குறிப்பிடுகிறேன்.

  1. BSE SENSEX
  2. BSE BANKEX
  3. BSE SENSEX 50
  4. BSE 100
  5. BSE Bharat 22 Index
  6. BSE Midcap
  7. BSE Smallcap
  8. BSE 200
  9. BSE 150 Midcap Index
  10. BSE 250 Smallcap Index இன்னும் பல…

இவை பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக காண்போம். இவற்றை பற்றி தெரிந்துகொண்டால் நாம் பங்குசந்தையில் முதலீடு செய்ய வசதியாக இருக்கும்.

Read Also : www.bseindia.com

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply