பங்கு சந்தையில் சம்பாதிக்கலாம் வாங்க!
வணக்கம் நண்பர்களே.
நலமாய் இருப்பீர்கள் தானே .
இன்று நாம் பங்கு சந்தையில் எவ்வாறு சம்பாதிப்பது என்று விரிவாக அலசலாம் வாருங்கள் . அதற்கு முன் நாம் ஒரு கொள்கையை வகுத்துக் கொள்ள வேண்டும் . என்னவென்றால் பங்கு சந்தை என்பது ஒரு நீண்ட நாள் முதலீட்டு தளமாக பார்க்கவேண்டும் . அதாவது முதலீடு செய்து 30 நாட்கள் கடந்த பின்போ அல்லது ஒரு வாரம் கடந்த பின்னரோ லாபம் பார்க்க வேண்டும் என்ற கொள்கையை வகுத்துக் கொள்ள வேண்டும் . இந்த கொள்கையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் . ஒரு வாரத்தில் லாபம் கிடைத்தால் அதை விற்று லாபத்தை அனுபவிக்க வேண்டும் . இல்லையெனில் லாபம் கிடைக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும். சரி லாபம் கிடைக்க நாம் என்னென்ன வழிகளை அல்லது நுட்பங்களை கடைபிடிக்க வேண்டும் என தெரிய வேண்டும் அல்லவா. அதை பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.
Analysis of Stocks :
பொதுவாக நாம் முதலீடு செய்ய பங்குகளை தேர்ந்தெடுக்க சில பல வழிகளை அலசி ஆராய வேண்டும் . அதற்காக கஷ்டப்பட்டு நாம் விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று தயங்கவோ பயப்படவோ வேண்டாம் . பங்கு சந்தையில் Strategies என சொல்லப்படும் உத்திகளை தெரிந்துகொண்டு முதலீடு செய்தால் நிச்சயம் நம்மால் லாபத்தை எட்ட முடியும் . அந்த உத்திகள் பல உள்ளன, அவற்றை நாம் அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம் .
நாம் இன்று இந்த பதிவில் காண உள்ள உத்திகளை கையாண்டு முதலில் பங்குகளை தேர்ந்தெடுங்கள். அவற்றை ஒரு 10 முதல் 15 நாட்கள் பாருங்கள் பின்னர் உங்கள் நிதி முதலீட்டு ஆலோசகரை தொடர்பு கொண்டு அவருடைய ஆலோசனையின் பேரில் பங்குகளை வாங்கி விற்று லாபம் பாருங்கள் .
இப்பொழுது நாம் இரண்டு சந்தை பகுப்பாய்வு முறைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ள உள்ளோம். அவை Bollinger Band மற்றும் EMA என்று சுருக்கமாக சொல்லப்படும் Exponential Moving Average ஆகும்.
Bollinger Band :
முதலில் நாம் பார்க்க இருப்பது Bollinger Band எனும் உத்தி ஆகும் . இந்த Analysis ஆனது 1983இல் John Bollinger என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த சில வருடங்களாக மிகச் சிறந்த ஒரு Analysis ஆக பலரால் பயன்படுத்தப்படுகிறது . இந்த முறை பங்கு சந்தையில் ஒரு பங்கின் Price Action மற்றும் volatility பயன்படுத்தி அதன் நகர்வினை கண்டறிய பயன்படுகிறது .
அமைப்பு :
Bollinger Band எவ்வாறு செயல்படுகிறது என நாம் இங்கு அறியலாம் . முதலில் Bollinger Band அமைப்பினை நாம் காணலாம் . இதனை பயன்படுத்தி விலை மாற்றத்தினை பொறுத்து பங்கின் விலை மேலே ஏறுமா அல்லது கீழே இறங்குமா என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும் . இந்த Bollinger Band -இல் மூன்று கோடுகள் உள்ளது . அவை Lower Band, Upper Band மற்றும் Middle Band என அழைக்கப்படுகிறது . இந்த Middle Band கோடுகள் SMA என சொல்லப்படும் Simple Moving Average -ஐ பயன்படுத்தி வரையப்படுகிறது . Upper Band மற்றும் Lower Band எனப்படுபவை Standard Deviation Lines ஆகும். இந்த மூன்று கோடுகளை பயன்படுத்தி வர்த்தகர்கள் Buy மற்றும் Sell Signal கண்டறிய முடியும் .
Bollinger Band in Trading View:
பொதுவாக நாம் பங்குச்சந்தையின் அனைத்து நகர்வுகளையும் Trading View எனும் Website அல்லது APP மூலமாக பார்க்கும்பொழுது எளிதில் புரிந்து கொள்ள முடியும் . அதற்க்கு Google Chrome இல் Trading View எனும் வலைத்தளத்தில் உங்கள் Mail Id கொண்டு உள் நுழையவும். பின்னர் உங்கள் பார்வைக்கு வேண்டிய Stock அல்லது Nifty, Bank Nifty ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் . Chart open ஆனதும் அங்கு Indicators எனும் Tab மேலே இருக்கும் அதை Click செய்தால் Search Bar இல் Bollinger Band என Type செய்தால் கீழ் வரும் list இல் தெரிவு செய்து click செய்யவும் . இப்பொழுது கீழே உள்ளது போல் chart வரும்.
Analysis of Bollinger Band in Trading View:
- Squeezing of Bands (Low Volatility)
- Expansion of Bands (High Volatility)
- Buy and Sell Signals என மூன்று பிரிவுகளில் Bollinger Band ஐ ஆராய முடியும். அவற்றை விரிவாக பார்க்கலாம் .
1. Squeezing of Bands (Low Volatility):
சந்தையில் அதிக அளவில் முதலீட்டாளர்கள் அல்லது வர்த்தகர்கள் இல்லையெனில் சந்தையானது சுணக்கமாக காணப்படும் . அப்பொழுது அதிக அளவில் வர்த்தகம் நடைபெறாது . இது போன்ற நேரங்களில் Bollinger Band ஆனது ஒரு குறுகிய பாதையில் பயணிக்கும். குறிப்பிட்ட சில நேரங்களுக்கு பிறகு சந்தை மேல் நோக்கியோ கீழ் நோக்கியோ நகரக்கூடும். அந்த நேரத்தில் Bollinger Band ஐ பார்த்து வர்த்தகத்தை துவங்கலாம்.
2. Expansion of Bands (High Volatility):
Bollinger Bandஇல் விரிவடைந்து சென்றால் சந்தை உச்ச கட்டத்தை அடையலாம் அல்லது கீழே இறங்கலாம். அதை மேலே உள்ள படத்தை பார்த்தாலே நம்மால் புரிந்து கொள்ள முடியும். புரிய வில்லை எனில் comment செய்யுங்கள் உங்களுக்கு விரிவாக நான் எழுதுகிறேன். சந்தை இது போன்ற நேரங்களில் அதிக அளவில் ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும் பொழுது நாம் வர்த்தகம் செய்து நல்ல லாபம் பெற முடியும்.
3. Buy and Sell Signals:
Buy Signal: சந்தை கீழே உள்ள Lower Band ஐ தொட்ட பிறகு உயர ஆரம்பிக்கும் அப்பொழுது நாம் பங்கினை வாங்கி Upper Band ஐ தொடும் பொழுது விற்று லாபம் பார்க்க முடியும். Lower Band ஐ தொடும் இடத்தை நாம் Buy Signal ஆக கருதலாம்.
Sell Signal: சந்தை மேலே உள்ள Upper Band ஐ தொடும் பொழுது பங்கை விற்று பின்னர் Lower Band ஐ தொடும் பொழுது வாங்கி லாபம் பார்க்க முடியும். Upper Band இல் தொடும் இடத்தை நாம் Sell Signal ஆக கருதலாம். விற்று வாங்கும் முறையானது ஒரே நாளில் நடைபெறவேண்டும். இந்த முறை அடுத்த நாளுக்கு தொடர முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.
Advantages of Bollinger Band:
- சந்தையின் போக்கை அறியவும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் வாங்கும் மற்றும் விற்கும் தன்மையை அறிய முடிகின்றது .
- Over Bought மற்றும் Over Sold எல்லையை அறிய முடிகிறது.
- மிக எளிதான ஒரு சந்தை ஆய்வு கருவியாக பார்க்க முடிகிறது.
நண்பர்களே மேலே கூறிய படி Bollinger Band ஐ பயன்படுத்தி ஒரு Stock ஐ வாங்கும் விலை மற்றும் விற்க்கும் விலை தெரிந்து கொள்ளுங்கள். இந்த யுக்தியை பல Stock களுக்கும் பயன்படுத்தி பாருங்கள், பின்னர் உங்கள் முதலீட்டு ஆலோசகரை தொடர்பு கொண்டு கேட்டு அறிந்து முதலீடு செய்யுங்கள்.
அடுத்ததாக நாம் பார்க்க இருக்கும் Strategy அல்லது Tool Moving Average ஆகும். இந்த Moving Average பற்றி இப்பொழுது நாம் விரிவாக காணலாம்.
Moving Average :
Moving Average என்பது என்னவெனில் Chart இல் கடைசியாக இருக்கும் Candleகளின் சராசரியே ஆகும் . Candle ஆனது விலை மதிப்பினை கொண்டு உருவாகின்றது அதாவது candle என்பது நாம் பார்க்கும் நேரத்தை பொறுத்து மாறுபடும் . பொதுவாக நாம் candle ஐ 1 second முதல் 1 மாதம் நேர இடைவெளியில் நாம் பார்க்க முடியும். Candle அமையும் முறையானது விலையின் ஏற்ற இறக்கம் அந்த நொடியில் அல்லது அந்த மணி நேரத்தில் நாம் எதை செட் செய்து பார்க்கிறோமோ அதன் படி அமையும். பொதுவாக 9,21,50,100 மற்றும் 200 candle களின் சராசரி அளவினை நாம் ஒரு வளைகோடாக பார்ப்போம்.
மூவிங் அவரேஜ் வகைகள்:
1. சாதாரண மூவிங் அவரேஜ் (Simple Moving Average – SMA):
– இதை கணக்கிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட நாட்களின் விலைகளின் சராசரியை எடுக்கின்றனர். உதாரணமாக, 10 நாள் SMA என்பது 10 நாட்களின் முடிவில் உள்ள விலைகளின் சராசரி ஆகும்.
– இது மெதுவாக பிரதிபலிக்கும், அதனால் மார்க்கெட் மாற்றங்கள் தாமதமாக காட்டப்படலாம்.
2. எக்ஸ்போனென்ஷியல் மூவிங் அவரேஜ் (Exponential Moving Average – EMA):
– இதில் சமீபத்திய விலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதனால் விலை மாற்றங்கள் துரிதமாக பிரதிபலிக்கப்படுகின்றன.
– இது SMA விட விரைவாகத் தொடர்ந்து சந்தையின் போக்குகளைப் பிரதிபலிக்கிறது, அதனால் இது குறுகிய கால வர்த்தகத்திற்கு மிகவும் பயன்படும்.
குறுகிய கால மற்றும் நீண்ட கால முதலீட்டில் பயன்பாடு:
குறுகிய கால முதலீடு (Short Term Investment):
– பொதுவாக 9, 12, அல்லது 20 நாட்களின் EMA பயன்படுத்தப்படுகின்றது.
– இது ஒரு விலையின் திடீர் மாற்றத்தைப் பற்றிய அறிவுறுத்தல்களை பெறுவதற்காகவும், விரைவான முடிவுகளை எடுக்கவும் உதவும்.
– நாள் வர்த்தகம் (Intraday Trading) மற்றும் சில நாட்களுக்கு செய்யப்படும் வர்த்தகங்களுக்குப் பயன்படுத்தலாம்.
நீண்ட கால முதலீடு (Long Term Investment):
– 50, 100, அல்லது 200 நாட்களின் SMA அல்லது EMA பயன்படுத்தப்படுகின்றது.
– இது சந்தையின் முக்கிய போக்குகளை கண்டறிந்து, நீண்ட கால சந்தையின் வழக்கமான மேம்பாட்டு அல்லது வீழ்ச்சிகளை அறிய உதவும்.
– நீண்ட கால முதலீட்டாளர்கள் (பொதுவாக 1 வருடத்திற்கு மேல்) சந்தையின் பொது போக்கை அறிந்து அதன்படி அவர்களின் முதலீட்டை பராமரிக்க முடியும்.
மூவிங் அவரேஜ் உபயோகத்தின் முக்கிய அம்சங்கள்:
1. போக்குகளை (Trends) அறிதல்:
– மார்க்கெட்டின் தற்போதைய போக்கை கண்டறிய மூவிங் அவரேஜ் பெரிதும் உதவுகிறது.
– எக்ஸ்போனென்ஷியல் மூவிங் அவரேஜ் வேகமாக மாற்றங்களுக்கு பிரதிபலிப்பதால் குறுகிய கால போக்குகளை அறிய உதவும்.
2. Trend Reversal அறிதல்:
– மூவிங் அவரேஜ் கோடுகள் சந்தையின் போக்கை மாற்றும் பொழுது சந்தையின் உயர்வு அல்லது சரிவு பற்றிய தகவலை எளிதாக அறிய உதவுகிறது.
3. Crossover உத்திகள்:
– இரண்டு மூவிங் அவரேஜ்களை பயன்படுத்தி வர்த்தக முடிவுகளை எடுக்கலாம். உதாரணமாக, 50 நாள் SMA மற்றும் 200 நாள் SMA இடையே குறுக்கீடு நிகழும்போது, அதாவது குறுகிய கால SMA நீண்ட கால SMA-யை கடக்கும்போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டும், இது “கோல்டன் கிராஸ்” என அழைக்கப்படுகிறது.
– இது வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு வாங்க அல்லது விற்பனை செய்யும் முக்கிய புள்ளியாக கருதப்படுகிறது .
இந்திய சந்தையில் (Indian Market) பயன்பாடு:
குறுகிய கால வணிகத்தில் Nifty மற்றும் Bank Nifty போன்ற Indices களுக்கு 5-20 நாட்களுக்கான EMA பொதுவாக அதிகம் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக Intraday Trading 20 EMA பயன்படுத்த படுகிறது.
நீண்ட கால முதலீட்டில் 50, 100, மற்றும் 200 நாட்களின் SMA மற்றும் EMA முக்கியமாக பயன்படுகின்றன, குறிப்பாக Index முதலீடுகள் மற்றும் Blue-chip கம்பனிகள் போன்ற துறைகளில் இந்த Moving Average பயன் படுத்தப் படுகிறது.
மூவிங் அவரேஜ்கள் உங்களுக்கு சந்தையின் பொது போக்கை அறிய உதவுவதுடன், அதனுடன் இணைந்து பிற உத்திகளை பயன்படுத்தினால், அது உங்கள் வர்த்தக முடிவுகளை மேலும் சரியான வழியில் எடுத்துச் செல்லும். அதாவது Moving Average மட்டும் பயன் படுத்தாமல் Moving Average உடன் வேறு ஏதேனும் ஒரு Tool ஐ இணைத்து பயன்படுத்தினால் மிகச் சிறந்த லாபங்களை பெற முடியும்.
Moving Average உடன் எந்த Tool ஐ பயன்படுத்தலாம் என அடுத்த பதிவில் நாம் காணலாம் . தொடர்ந்து இணைந்திருங்கள் நன்றி வணக்கம்.