என்ன நடக்குது பங்குசந்தையில் :
நண்பர்களுக்கு வணக்கம்.
அனைவரும் நலமா! நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இனி நமது பயணத்தை தொடர்வோம். இன்றைய பதிவில் நாம் MACD Indicator பற்றியும் பங்குச்சந்தையில் இறக்கம் ஏன் என்பதையும் காணலாம். மேலும் இந்த இறக்கத்தை பயன்படுத்தி நாம் கவனிக்க வேண்டிய பங்குகள் பற்றியும் இங்கு காணலாம்.
பங்குச்சந்தையில் இறக்கம் ஏன்:
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை பல புள்ளிகள் கீழே இறங்கி உள்ளன. Index மட்டும் இல்லை அனைத்து பங்குகளும் மிக குறைந்த விலையை பெற்றுள்ளன. இந்த நேரத்தை முதலீடு செய்யலாமா அல்லது இன்னும் இறங்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். பங்குச்சந்தையின் இந்த இறக்கத்தால் இந்திய பங்குசந்தை ஏறக்குறைய 50 லட்சம் கோடிக்கு மேல் நஷ்டத்தை அடைந்துள்ளது. இருப்பினும் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விற்கும் போக்கு சற்றே குறைந்தே காணப்படுகிறது. உள்நாட்டு சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உறைந்து போய் உள்ளனர். இன்னும் சில நாட்களில் இந்த போக்கு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வப்பொழுது பங்குசந்தையில் அதானி குழுமத்தால் வரும் செய்திகள் ஏற்றத்தையும் இறக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. அமெரிக்காவில் Donald Trump இன் ஆட்சியில் உலக அளவில் பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்தை காண இருக்கின்றன.
கடந்த வாரத்தில் அமெரிக்க பங்குசந்தை கண்காணிப்பு அமைப்பான SEC எனப்படும் Securities and Exchange Commission அதானி உள்ளிட்டோர் மீது தொடுத்த வழங்கினால் ஒரே நாளில் நமது இந்திய பங்குசந்தை இரண்டு லட்சம் கோடி நஷ்டத்தில் உள்ளது . அமெரிக்க நீதிமன்றம், SEC மற்றும் FBI கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மற்றும் ASSURE Power Global நிறுவனத்தின் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. பங்குசந்தையில் மோசடி , வயர் விற்பனையில் மோசடி, சோலார் திட்டங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பங்குச்சந்தை மட்டுமல்ல இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளையும் கலவரத்தில் ஆழ்த்தியுள்ளன. இதனால் இந்திய பங்குசந்தையில் அதானி குழும பங்குகள் இறக்கத்தை கண்டன.
பின்னர் கவுதம் அதானி அளித்த விளக்கத்தின் அடிப்படையில் பங்குசந்தை சிறிது நேரம் நிலை பெற்றது . இன்றைய வர்த்தக (22.11.2024) நேர முடிவில் அதானி நிறுவன பங்குகள் அடைந்த சரிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அதானி பங்குகள் ஏற்றம் பெறுமா அல்லது வீழ்ச்சி அடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .
MACD Indicator :
பல நாட்களாக MACD Indicator மிகச் சிறந்த ஒரு indicator ஆக கருதப்படுகிறது. MACD என்பது Moving Average Convergence Divergence என்பதன் சுருக்கமே ஆகும். இந்த Indicator இந்திய பங்குச்சந்தையில் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த Indicator இன் அமைப்பு அதை பயன்படுத்தி trade செய்யும் முறை பற்றி இனி காண்போம்.
MACD Indicator என்றால் என்ன?
MACD என்பது ஒரு Momentum Oscillator ஆகும் . இது சந்தையின் நகரும் விதத்தினை கண்டறிந்து நாம் முன்கூட்டியே கணித்து பங்குகளை வாங்க அல்லது விற்க உதவும் ஒரு கருவியாக இதனை பயன்படுத்தலாம். இது இரண்டு Moving Average Line களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ஒரு Indicator ஆகும் .
இது மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது.
- MACD Line : இது பொதுவாக 12 நாள் மற்றும் 26 நாள் Exponential Moving Averageகளின் வேறுபாட்டை குறிக்கிறது.
- Signal Line : இது MACD Line இன் 9 நாள் EMA ஆகும். இது MACD Signalகளை ஒருங்கிணைத்து வாங்கும் அல்லது விற்கும் சிக்னல்களை உருவாக்குகிறது.
- Histogram : இது MACD Line கும் Signal Lineகும் இடையிலான வேறுபாட்டை குறிக்கிறது. MACD Signal Line கு மேலே இருக்கும் பொழுது ஹிஸ்டாக்ராம் நேர்மறையாக இருக்கும், மற்றும் MACD Line கும் கீழ் இருக்கும் போது எதிர்மறையாக இருக்கும்.
MACD யின் முக்கியத்துவம் :
- Moving Average : இவை பங்கு விலையை நிலைப்படுத்தி வாங்கும் விற்கும் காலங்களை அடையாளம் காண உதவுகின்றது. 12 நாள் EMA சமீபத்திய விலை மாற்றத்திற்கு விரைவாக கணிக்க உதவுகிறது, ஆனால் 24 நாள் EMA மெதுவாகவும் நிலையாகவும் விலை மாற்றத்தினை அறிய முடிகிறது . இரண்டு average க்கும் இடையிலான வித்தியாசமே MACD Line ஆகும் .
- Convergence & Divergence : இரண்டு Moving Average ஒன்றாக வரும் பொழுது Convergence எனப்படும் . அப்பொழுது அந்த பங்கு வலிமை இழந்து காணப்படும், அதாவது விற்பனை மற்றும் வாங்குதல் என்பது ஏறக்குறைய ஒரே அளவில் நடைபெறும் . இரண்டு Moving Average Line களும் விலகி செல்லும் பொழுது Divergence ஆனது நடைபெறும், அப்பொழுது பங்கு நல்ல ஏற்றத்தையோ அல்லது இரக்கத்தையோ அடைய உள்ளது என அறிய முடியும் .
- Crossover : MACD Line Signal Line ஐ மேலே கடக்கும் பொழுது மிகச் சிறந்த வாங்கும் வாய்ப்பாக கருதலாம். MACD Line Signal Line ஐ கீழே கடக்கும் பொழுது மிகச் சிறந்த விற்கும் வாய்ப்பாக கருதலாம்.
- Zero Line : MACD பூஜ்ய கோட்டிற்கு மேலேயும் கீழேயும் ஏற்ற இறக்கமாக இருக்கும். பூஜ்ய கோட்டுடன் தொடர்புடைய MACD இன் நிலை சந்தையின் போக்கை அறிய உதவும். MACD Line, Zero Line க்கு மேலே இருந்தால் பங்கு வாங்கும் வாய்ப்பை அளிக்கிறது ஆனால் MACD Line, Zero Line க்கு கீழே இருந்தால் பங்கு விற்கும் வாய்ப்பை அளிக்கிறது.
இந்திய பங்கு சந்தையில் MACD பயன்படுத்துவது எப்படி?
- வாங்கும் மற்றும் விற்கும் விலைகளை கண்டறிதல்: வாங்கும் விலை MACD Line ஆனது Signal Line ஐ மேல் நோக்கி கடந்தால் அந்த பங்கு மேல் நோக்கி உயர வாய்ப்பு உள்ளதாக வர்த்தகர்கள் கருதலாம். கடக்கும் பொழுது மட்டுமே இதை கருத்தில் கொள்ள வேண்டும் இதனை Bullish Crossover என்று கூறுவர். விற்கும் விலை MACD Line ஆனது Signal Line ஐ கீழ் நோக்கி கடந்தால் அந்த பங்கு விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வர்த்தகர்கள் கருதலாம். இந்த நேரத்தில் லாபத்தில் உள்ள பங்குகளை விற்று லாபம் அடையலாம் அல்லது புதிதாக பங்கினை விற்று விலை இன்னும் கீழே இறங்கும் பொழுது விற்று லாபம் அடையலாம். கடக்கும் பொழுது மட்டுமே இதை கருத்தில் கொள்ள வேண்டும் இதனை Bearish Crossover என்று கூறுவர்.
- Trend Reversal நிர்ணயித்தல்: ஒரு பங்கின் விலையானது அதிகபட்ச விலையை அடைந்தாலும் MACD Line உயரவில்லை எனில் அந்த பங்கு விரைவில் விலை குறைய வாய்ப்புள்ளதாக கருதலாம். அதேபோல ஒரு பங்கி விலையானது குறைந்து கொண்டே சென்றாலும் MACD Line குறையவில்லை எனில் அந்த பங்கின் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கருதி அந்த பங்கினை வாங்கலாம். இவ்வாறே ஒரு பங்கின் விலையானது மாறுபடுவதை நாம் MACD Indicator கொண்டு அறிய முடியும் .
- Strength of Trend : Histogram barஐ வைத்தே Trend ஐ அறிந்து கொள்ள முடியும் . Histogram ல் bar ஆனது பெரியதாக இருந்தால் அது positive அல்லது negative ஆக இருந்தாலும் வலுவான ஒரு ட்ரெண்டாக இருக்கும். அதுவே Histogram பார் அனைத்து சிறியதாக மாற ஆரம்பித்தால் வலு குறைந்த ட்ரெண்டாக இருக்கும் . இவற்றை நாம் கீழே உள்ள படத்தை பார்த்து புரிந்து கொள்ள முடியும் .
அடுத்த பதிவில் நாம் மேலும் ஒரு இண்டிகேட்டர் பயன்படுத்துவது எப்படி என தெரிந்து கொள்வோம் தொடர்ந்து இணைந்திருங்கள் லாபம் ஈட்ட மட்டுமல்ல அறிந்து கொள்ளவும் இணைந்திருங்கள். நன்றி மீண்டும் அடுத்த பதிவில் பார்க்கலாம் .
Disclaimer:
Do not trade the strategies or stocks in this post, you can use this as examples and how to deelop your trading knowledge. You will be only successful by back testing and evaluating the levels by yourself. Before investing or trading consult your financial advisor. If any loss or profit making by you while using this platform, this blog is not responsible. the contents here are for you to analyse and watch only. I am not SEBI registered person.
இந்த இடுகையில் உள்ள உத்திகள் அல்லது பங்குகளை வர்த்தகம் செய்ய வேண்டாம்,
இதை நீங்கள் எடுத்துக்காட்டுகளாகப் பயன்படுத்தலாம் மற்றும் உங்கள் வர்த்தக அறிவை
எவ்வாறு மேம்படுத்துவது. மீண்டும் சோதனை செய்து, நிலைகளை நீங்களே மதிப்பீடு
செய்வதன் மூலம் மட்டுமே நீங்கள் வெற்றி பெறுவீர்கள். முதலீடு அல்லது வர்த்தகம்
செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரை அணுகவும். இந்த தளத்தைப் பயன்படுத்தும்
போது நீங்கள் ஏதேனும் இழப்பு அல்லது லாபம் ஈட்டினால், இந்த வலைப்பதிவு பொறுப்பல்ல.
இங்குள்ள உள்ளடக்கங்கள் நீங்கள் பகுப்பாய்வு செய்து பார்க்க மட்டுமே.
நான் செபி பதிவு பெற்ற நபர் அல்ல.