இந்த வாரம் 16-09-2024 முதல் 20-09-2024 வரை பங்குசந்தை ஒரு பார்வை !
வணக்கம் நண்பர்களே!
நான் உங்கள் பாபு. நலமாய் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை தொடரலாமா ?
அவ்வப்பொழுது நான் அந்த வாரத்தில் பங்குசந்தை எவ்வாறு செயல்பட்டது என்று பதிவிட விரும்புகிறேன். அதிலும் குறிப்பாக நான் தேர்ந்தெடுத்த பங்குகள் இந்த வாரம் எவ்வாறு வர்த்தகம் ஆனது மற்றும் என்ன விலையில் வர்த்தகமானது என உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் . இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை comment -இல் தெரிவிக்கவும் . நீங்கள் எந்த பங்குகளை வாங்கினீர்கள் அல்லது எந்த பங்குகளை கவனித்தீர்கள் என comment -இல் தெரிவிக்கவும்.
எனது பார்வைகள் :
இந்த வாரம் நான் ஞாயிறு 15-09-2024 அன்று சில பங்குகளை தேர்ந்தெடுக்க https://www.screener.in/ என்ற வலைத்தளத்தை பயன்படுத்தினேன் . இந்த தளம் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளின் நிலவரத்தை கண்டறிய பயன்படுத்தலாம் . இதில் நாம் google login பயன்படுத்தி உள்ளே சென்றால் நமக்கு தேவையான பங்குகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் . மேலும் நமக்கு தேவையான Sector பங்குகளை Analysis செய்ய முடியும் .
என்னுடைய Analysis :
நான் முதலில் சென்ற வாரத்தில் விலை அதிகரித்த பங்குளை அதன் சந்தை மூலதன மதிப்பீட்டை வைத்தும் அலசியத்தில் முதல் பத்து பங்குகளை தெரிவு செய்து அதை ஒரு வாரம் கண்காணித்து வந்ததில் கிடைத்த முடிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
See Also : https://www.youtube.com/watch?v=C5Sj1NalXy8
முதலில் Nestle India பங்கு பற்றி பார்ப்போம் . 254213.20 கோடி சந்தை மூலதனத்துடன் மக்களால் அதிகமாக விரும்பி வாங்கும் துறையில் அதாவது FMCG sector இல் உள்ளது . 15.09.2024 அன்று ரூ 2531 என்ற விலையில் வர்த்தகம் நடைபெற்றது . இறுதியாக அதாவது 20-09-2024 அன்று என்ன விலையில் வர்த்தகம் முடிந்தது என்று இந்த பதிவின் இறுதியில் பார்ப்போம்.
இரண்டாவது இடத்தில் P & G Hygine பங்கு உள்ளது . இதுவும் FMCG Sector இல் உள்ள மிக முக்கியமான பங்கு . இந்நிறுவனம் 54028 கோடி சந்தை மூலதனத்துடன் Nestle உடன் போட்டியில் உள்ளது . 15.09.2024 அன்று ரூ 16652 என்ற விலையில் வர்த்தகம் நடைபெற்றது . இறுதியாக அதாவது 20-09-2024 அன்று என்ன விலையில் வர்த்தகம் முடிந்தது என்று இந்த பதிவின் இறுதியில் பார்ப்போம்.
மூன்றாவது நாம் பார்க்க இருக்கும் பங்கு Lloyds Metals பங்கு, இந்நிறுவனம் 44,070 கோடி சந்தை மூலதனத்துடன் Metal Sector -இல் பட்டியலிடப்பட்டுள்ளது . 15.09.2024 அன்று ரூ 774 என்ற விலையில் வர்த்தகம் நடைபெற்றது . இறுதியாக அதாவது 20-09-2024 அன்று என்ன விலையில் வர்த்தகம் முடிந்தது என்று இந்த பதிவின் இறுதியில் பார்ப்போம்.
நான்காவது நாம் பார்க்க இருக்கும் பங்கு TCS பங்கு, இந்நிறுவனம் ரூ 15,50,314 கோடி சந்தை மூலதனத்துடன் IT Sector -இல் பட்டியலிடப்பட்டுள்ளது . இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம் என்ற பெருமை பெற்ற நிறுவனம். 15.09.2024 அன்று ரூ 4522 என்ற விலையில் வர்த்தகம் நடைபெற்றது . இறுதியாக அதாவது 20-09-2024 அன்று என்ன விலையில் வர்த்தகம் முடிந்தது என்று இந்த பதிவின் இறுதியில் பார்ப்போம்.
ஐந்தாவது நாம் பார்க்க இருக்கும் பங்கு Coal India நிறுவனத்தின் பங்கு, இந்நிறுவனம் 3,02,559 கோடி சந்தை மூலதனத்துடன் Energy Sector -இல் பட்டியலிடப்பட்டுள்ளது . 15.09.2024 அன்று ரூ 490 என்ற விலையில் வர்த்தகம் நடைபெற்றது . இறுதியாக அதாவது 20-09-2024 அன்று என்ன விலையில் வர்த்தகம் முடிந்தது என்று இந்த பதிவின் இறுதியில் பார்ப்போம்.
அடுத்ததாக நான் கவனித்த பங்கு மத்திய அரசு நிறுவனத்தின் ரயில்வே துறை சார்ந்த பங்கு IRCTC ஆகும் . இந்நிறுவனம் 71,540 கோடி சந்தை மூலதனத்துடன் மத்திய அரசின் மினி ரத்னா அந்தஸ்துடன் பட்டியலிடப்பட்டுள்ளது . 15.09.2024 அன்று ரூ 937 என்ற விலையில் வர்த்தகம் நடைபெற்றது . இறுதியாக அதாவது 20-09-2024 அன்று என்ன விலையில் வர்த்தகம் முடிந்தது என்று இந்த பதிவின் இறுதியில் பார்ப்போம்.
ஏழாவது இடத்தில் Glaxosmithkline Pharmaceuticals Ltd பங்கு உள்ளது . இதுவும் Pharma Sector இல் உள்ள மிக முக்கியமான பங்கு . இந்நிறுவனம் ரூ 46,021 கோடி சந்தை மூலதனத்துடன் உள்ளது . 15.09.2024 அன்று ரூ 2905 என்ற விலையில் வர்த்தகம் நடைபெற்றது . இறுதியாக அதாவது 20-09-2024 அன்று என்ன விலையில் வர்த்தகம் முடிந்தது என்று இந்த பதிவின் இறுதியில் பார்ப்போம்.
எட்டாவது இடத்தில் Brittania Industries பங்கு உள்ளது. இதுவும் FMCG Sector இல் உள்ள மிக முக்கியமான பங்கு . இந்நிறுவனம் ரூ 1,49,502 கோடி சந்தை மூலதனத்துடன் Nestle உடன் போட்டியில் உள்ளது . 15.09.2024 அன்று ரூ 6,133 என்ற விலையில் வர்த்தகம் நடைபெற்றது . இறுதியாக அதாவது 20-09-2024 அன்று என்ன விலையில் வர்த்தகம் முடிந்தது என்று இந்த பதிவின் இறுதியில் பார்ப்போம்.
அடுத்ததாக CG Power & Industrial Solutions நிறுவனத்தின் பங்கு கவனிக்கப்பட்டது. இது Electrical Equipment தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ரூ 1,14,101 கோடி சந்தை மூலதனத்துடன் மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தையில் வர்த்தகம் நடைபெறும் பங்காக உள்ளது . 15.09.2024 அன்று ரூ 713 என்ற விலையில் வர்த்தகம் நடைபெற்றது . இறுதியாக அதாவது 20-09-2024 அன்று என்ன விலையில் வர்த்தகம் முடிந்தது என்று இந்த பதிவின் இறுதியில் பார்ப்போம்.
கடைசியாக நாம் பார்க்க இருக்கும் பங்கு Hindustan Zinc நிறுவனம் ஆகும் . இது உலக அளவில் Zinc material தயாரிக்கும் ஐந்தாவது மிகப் பெரிய நிறுவனம் ஆகும் . இந்நிறுவனம் ரூ 2,11,562 கோடி சந்தை மூலதனத்துடன் Metal Sector -இல் பட்டியலிடப்பட்டுள்ளது . 15.09.2024 அன்று ரூ 496 என்ற விலையில் வர்த்தகம் நடைபெற்றது . இறுதியாக அதாவது 20-09-2024 அன்று என்ன விலையில் வர்த்தகம் முடிந்தது என்று இந்த பதிவின் இறுதியில் பார்ப்போம்.
நாளைய (23-09-2024) பங்குசந்தை ஒரு பார்வை:
இப்பொழுது நாம் நாளை (23-09-2024 அன்று ) வர்த்தகம் நடைபெறும்பொழுது கவனிக்க வேண்டிய சில பங்குகளை இங்கு காண்போம் . கீழ் கண்ட பங்குகள் நாளை வர்த்தகம் செய்ய ஏற்ற பங்குகளாக பார்க்கப்படுகின்றது .
ITC, LTTS, NESTLEIND, BAJAJ-AUTO, BANDHANBNK, ABFRL, ASIANPAINT, JSWSTEEL, NATIONALUM (National Aluminium), NTPC, POWERGRID, SBICARD, SIEMENS மற்றும் ULTRACEMCO ஆகிய பங்குகளை நாம் வர்த்தகத்திற்கு தேர்வு செய்யலாம் .
கருத்தில் கொள்ள வேண்டிய நடைமுறை :
மேற்கூறிய பங்குகளை வர்த்தகம் துவங்கிய முதல் 15 நிமிடம் கவனியுங்கள். Chart இல் முதல் 15 நிமிட candle ஐ விட அதிக விலைக்கு வர்த்தகம் நடைபெற்றால், அதாவது அந்த நாளில் முதல் 15 நிமிட Candle ஐ உடைத்து மேலே சென்றால் அந்த பங்கினை வாங்கி விற்றால் லாபம் அடைய வாய்ப்புள்ளது . இல்லையென்றால் 15 நிமிட candle ஐ உடைத்து கீழே சென்றால் விற்று வாங்கி லாபம் அடைய முடியும் .
பங்குசந்தையில் கீழே சென்றாலும் லாபம் ஈட்ட முடியும் என்பதை நாம் நாளைய வர்த்தகத்தில் மேற்சொன்ன வழிமுறைகளை கடைபிடித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .
மேலே பார்த்த பங்குகளின் விலை நிலவரம் :
சென்ற வாரத்தில் நாம் பார்த்த பங்குகள் ஒன்று வீதம் வாங்கி இருந்தால் நாம் அடைந்திருக்க வேண்டிய நஷ்டம் ஏறக்குறைய ரூ 82 ஆகும் . விலை நிலவரத்தை நாம் கீழே உள்ள அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்வோம் .
பங்கு சந்தை இன்று (23-09-2024):
நாளை (23-09-2024) வாரத்தின் முதல் நாள் ஆகும். நாளை பங்குசந்தை எப்படி இருக்கும் என்பதனை இப்பொழுது நாம் காணலாம் .
சந்தையில் Support and Resistance பற்றி தெரியவில்லை எனில் நம் வலைதளத்தில் உள்ள பதிவினை காணுங்கள். ஏனெனில் நாம் ஒவ்வொரு நாளும் Support and Resistance Zone தெரிந்து கொண்டால் மிக சுலபமாக சந்தையின் போக்கை நாம் அறிந்து கொள்ள முடியும் . அப்படி என்னால் support and resistance ஐ கணிக்க இயலாது எனில் நமது இந்த வலை தளத்தினை தினமும் காலையில் பார்த்து வந்தால் அன்றைய Support & Resistance வெளியிடப்படும். அதனை பயன்படுத்தி அன்றைய நிலைகளை நாம் அறிந்து கொள்ள முடியும் .
இன்றைய சந்தை நிலவரம் என்னவென்றால் நாம் Trading View வலைத்தளத்தையோ App -ஐயோ பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் . Trading View வலைத்தளத்தை பயன்படுத்த தெரியவில்லை எனில் இப்பதிவில் comment செய்யுங்கள் , அதைப்பற்றிய விரிவான தகவல்களை நான் இங்கு இடுகிறேன் . பொதுவாக நாம் Levels ஐ பார்ப்பதற்கு Day Chart ஐ பயன்படுத்த வேண்டும் .
Nifty Analysis :
கடந்த ஒரு வாரமாக பங்குச்சந்தையின் நகர்வினை பார்க்கும் பொழுது சந்தை உயர்வதற்கான வாய்ப்பினையே காட்டுகிறது . 20-09-2024 அன்று Nifty அதிகபட்ச புள்ளியை எட்டியுள்ளது . அதிகபட்சமாக 25,849.25ஐ தொட்டுள்ளது . அன்றைய நாள் முடிவில் 25,790.95இல் முடிவடைந்துள்ளது . இன்று சந்தையில் நல்ல momentum ஆக வாய்ப்புள்ளது. இந்த momentum ஆனது சந்தை open ஆகும் நிலையை பொறுத்து மாறுபடும் . 20-09-2024 அன்று முடிந்த நிலையை தண்டி மேலே open ஆனால் நல்ல momentum எதிர்பார்க்கலாம். மேலும் இந்த நிலைகளில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது . ஏனென்றால் அதிக முதலீட்டாளர்கள் லாப நோக்குடன் செயல்பட நினைத்தால் சந்தை சரிய வாய்ப்புள்ளது .
23-09-2024க்கான Support & Resistance :
இன்று சந்தை 25861.15, 25951.2 & 26002 என்ற உயர்ந்த நிலையை அடையலாம். மேலும் 25688, 25618.9 மற்றும் 25567.35 என்ற குறைந்த புள்ளிகளை எட்ட வாய்ப்புள்ளது .
Banknifty Analysis :
Banknifty 53793.2இல் கடந்த வாரம் முடிவுக்கு வந்துள்ளது . Banknifty யும் அதிக பட்ச புள்ளியை சென்ற வாரத்தில் எட்டியுள்ளது . அதாவது 54066.1 என்ற அதிக பட்ச இலக்கை தொட்டு 53793.2இல் முடிவடைந்துள்ளது. இன்று இது ( 23-09-2024) 53941, 54227 மற்றும் 54406 என்ற அதிக பட்ச இலக்குகளை அடையலாம். அல்லது 53712, 53490 மற்றும் 53198 என்ற புள்ளிகளிலும் வர்த்தகம் நடைபெற வாய்ப்புள்ளது . Banknifty சரியான ஏற்ற இறக்கம் பெற கீழ் கண்ட நிலைகளை கடந்தால் மட்டுமே சாத்தியம் .
23-09-2024க்கான Support & Resistance :
இன்று சந்தை 53941, 54227 மற்றும் 54406 என்ற உயர்ந்த நிலையை அடையலாம். மேலும் 53712, 53490 மற்றும் 53198 என்ற குறைந்த புள்ளிகளை எட்ட வாய்ப்புள்ளது .
23-09-2024 முதல் 27-09-2024 வரை கவனிக்கவேண்டிய பங்குகள் :
கீழே பட்டியலில் உள்ள பங்குகள் வரும் வாரத்தில் நமது கண்காணிப்பில் இருக்கும் பங்குகள் . இவற்றை பற்றி நாம் அடுத்து வரும் பதிவுகளில் காணலாம் . நாளை நாம் கவனிக்க வேண்டிய பங்குகளை பற்றி இந்த பதிவில் மேலே பார்த்தோம் அவற்றையும் கவனியுங்கள் .
அடுத்த பதிவில் நாம் நிறைய கருத்துக்களை அலசி ஆராய்வோம் . இந்த வாரம் நல்ல லாபகரமான வாரமாக அமைய என் வாழ்த்துக்கள் .
Disclaimer:
Do not trade the strategies or stocks in this post, you can use this as examples and how to deelop your trading knowledge. You will be only successful by back testing and evaluating the levels by yourself. Before investing or trading consult your financial advisor. If any loss or profit making by you while using this platform, this blog is not responsible. the contents here are for you to analyse and watch only. I am not SEBI registered person.
இந்த இடுகையில் உள்ள உத்திகள் அல்லது பங்குகளை வர்த்தகம் செய்ய வேண்டாம்,
இதை நீங்கள் எடுத்துக்காட்டுகளாகப் பயன்படுத்தலாம் மற்றும் உங்கள் வர்த்தக அறிவை
எவ்வாறு மேம்படுத்துவது. மீண்டும் சோதனை செய்து, நிலைகளை நீங்களே மதிப்பீடு
செய்வதன் மூலம் மட்டுமே நீங்கள் வெற்றி பெறுவீர்கள். முதலீடு அல்லது வர்த்தகம்
செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரை அணுகவும். இந்த தளத்தைப் பயன்படுத்தும்
போது நீங்கள் ஏதேனும் இழப்பு அல்லது லாபம் ஈட்டினால், இந்த வலைப்பதிவு பொறுப்பல்ல.
இங்குள்ள உள்ளடக்கங்கள் நீங்கள் பகுப்பாய்வு செய்து பார்க்க மட்டுமே.
நான் செபி பதிவு பெற்ற நபர் அல்ல.